நல்ல முறையில் தேர்வை எழுத வேண்டும் என்றும், இறைவன் நாடினால், நிச்சயமாக வெற்றியின் படிகளை எட்டி பிடிக்க வேண்டும் என்றும் தீர்க்கமாக முடிவெடுத்து விட்டோம். இப்பொழுது நாம் இந்த தேர்வுக்கான பாடங்களை முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு கிடைக்கும் நேரங்களை வீணடித்து விடாமல், அது மிக குறைவான நேரமாக இருந்தாலும் சரி, புதிய புதிய விசயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
* நீங்கள் எழுத இருக்கும் முதனிலை தேர்வான Preliminary Examination ஆங்கிலத்திலும், ஹிந்தி மொழியிலும் மட்டுமே இருக்கும். எனவே முதலில் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* தினமும் The Hindu, Indian Express போன்ற ஆங்கில மொழிப் பத்திரிகைகளில் ஏதேனும் ஒன்றை வழமையாக படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
* ஆங்கில பத்தி செய்திகளை விரைவாக படித்து புரிந்து கொள்ளும் திறனை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
* ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளி பாடங்களின் புத்தகங்களையும் ஒரு முறை விரைவாக, அதே நேரம் நல்ல புரிதலுடன் வாசித்து விட வேண்டும்.
முதலில் நாம் படிக்க ஆரம்பிக்க வேண்டியது பற்றிய பாட திட்டத்தினை (Syllabus) பற்றி பார்ப்போம்.
பொது அறிவு தேர்வுத் தாள் - I
மதிப்பெண்கள் 200 ( 2 மணி நேரம் ) மொத்த கேள்விகள் - 100
* தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் தற்போதைய நிகழ்வுகள்
* இந்தியா மற்றும் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு
* இந்திய மற்றும் உலக புவியியல் - சமூக, பொருளாதார புவியியல்
* இந்திய அரசியல் அமைப்பு மற்றும் அரசியல், பஞ்சாயத்து ராஜ், பொது கொள்கைகள், உரிமைகள் சிக்கல்கள், முதலியன
* பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு - நிலையான அபிவிருத்தி, வறுமை, மக்கள், சமூக நலம் முயற்சிகள், முதலியன
* சுற்றுச்சூழல் சூழலியல், உயிரி பன்முகத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பொது பிரச்சினைகள்
* பொது அறிவியல்.

மதிப்பெண்கள் 200 ( 2 மணி நேரம் ) மொத்த கேள்விகள் - 80
நீங்கள் கணித பாடத்திலும், ஆங்கில பாடத்திலும் சிறு வயதிலிருந்தே ஆர்வமுடையவர் என்றால், கவலையை விடுங்கள்.. உங்களுக்கு வெற்றி நிச்சயம். ஏனெனில் இந்த பொது அறிவு இரண்டாம் தாள் முழுக்க, முழுக்க கணிதம் மற்றும் ஆங்கில பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டது.

அவ்வாறு நீங்கள் ஆர்வம் உடையவராக இல்லையென்றாலும், இந்த பாடத்திட்டம் உங்களுக்கும் மிகவும் எளிதானதே. ஒரு இருபது நாள்கள் இதற்காகவே முழுவதும் ஒதுக்கி முயற்சி செய்தால், பெரும்பானான கேளவிகளுக்கு விடையளித்து, வெற்றி பெற முடியும்.
* அறியும் சக்தி
* தகவல் தொடர்பு திறன் உட்பட மனித திறன்கள்;
* தருக்க பகுத்தறிதல் மற்றும் பகுப்பாய்வு திறன்
* தீர்க்கும் முடிவெடுத்தல் மற்றும் சிக்கல்
* பொது மனத்திறன்
* அடிப்படை எண் (எண்கள் மற்றும் அவைகளின் உறவுகள் முதலியன) தரவு விளக்கம் (வரைபடங்கள், அட்டவணைகள், தரவு நிறைவு முதலியன)
* ஆங்கிலம் காம்ப்ரஹென்ஷன் திறன்கள்
* ஆங்கில மொழி புரிதல் திறன் தொடர்பான கேள்விகள்
இந்த ஒவ்வொரு பாடத்திட்ட தலைப்பின் கீழும் நீங்கள் முக்கியகாக படிக்க வேண்டிய மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் குறித்து இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment