Sunday 22 January 2012

ஐ.ஏ.எஸ் கனவுகள் நிஜமாகும் காலம்.. உங்கள் கையில் !


அன்பார்ந்த நண்பர்களே !

நம் இராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பாக நம் கீழக்கரையில், பத்தாவது பாஸ் செய்தால், அடுத்து பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டு வேலைக்கு பறப்பது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது நம் பிள்ளைகள் ஓரளவுக்கு கல்லூரிகளில் கால் பதித்து பட்டதாரிகள் ஆகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இருந்தாலும் கூட, அவர்களும் வெளி நாட்டு வேலை வாய்ப்பையே முழுதாய் நம்பியுள்ளனர். நம் மண்ணிலேயே அரசாங்க உயர் பதவிகளுக்கு யாரும் முயற்சி செய்வது கிடையாது. அதை பற்றியான எந்த ஒரு விழிப்புணர்வும் அவர்கள் மத்தியில் இல்லை.

நம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கூட அரசாங்க வேலை வாய்ப்புகள் பற்றி சொல்லி கொடுப்பது இல்லை. ஒரு சில மாணவர்களிடம் மட்டும் "நான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும்.. நான் ஐ.பி.எஸ் ஆக வேண்டும்.." என்ற கனவுகள் இருந்தாலும் கூட, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால், அது கனவாக மட்டுமே கரைந்து விடுகிறது. ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டுமென்றால், எங்கே அதற்கான விண்ணப்பம் கிடைக்கும் ? என்று கூட தெரியாத நிலையே இன்றும் இருந்து வருகிறது.

ஆகவே இனியும் இந்த அரசாங்க வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை நழுவ விடாமல், முறையாக பயன்படுத்தி கொள்ள, இந்த ஐ.ஏ.எஸ் வழிகாட்டி தளத்தினில், ஆர்வம் கொண்ட அனைவரும் இணையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

கீழை இளையவன்

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)சிறப்பான முயற்சி.தங்கள் முயற்சி வளர்ச்சி பெற்று வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்!நமதூர் மாணவச்செல்வங்கள் எதிர் காலத்தில் // வெளி நாட்டு வேலை வாய்ப்பையே முழுதாய் நம்பியுள்ளனர். நம் மண்ணிலேயே அரசாங்க உயர் பதவிகளுக்கு யாரும் முயற்சி செய்வது கிடையாது. அதை பற்றியான எந்த ஒரு விழிப்புணர்வும் அவர்கள் மத்தியில் இல்லை.// என்ற தங்களின் கூற்றுக்கு இயம்ப நல்ல தொரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வாழ்வாதாரமும்,சமுதாயமும் உயர தங்களின் நோக்கம் கண்டிப்பாக உதவும்.எனது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.

    ReplyDelete